அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

 குரலால்,எழுத்தால்,ஆண்ட மன்னன்.தமிழ் நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா.

சி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் "தளபதி" .பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார்.

அறிஞர் அண்ணா பிறந்தநாள் - 15.09.1909

அறிஞர் அண்ணா இறந்தநாள் - 03.02.1969

அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

அறிவாலும் ஆற்றலாலும்  ஆகாத காரியம் இல்லை,

அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்!

அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன், வாழ்த்துக்குரியவன்; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது, சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும்
உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன் - பேரறிஞர் அண்ணா




உள்ள உயிர் ஒன்றுதான் அது போகப் போவதும் ஒரு முறைதான். இருமி, ஈளைக் கட்டிச் சாவதைவிட, இந்தியை எதிர்த்து அந்த உயிர் போகிறது என்றால் அதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியை எதிர்த்து அந்த உயிர் போகிறது என்றால் அதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்

கண்டனத்தை தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லை என்றால் கடமையை நிறைவேற்ற முடியாது
கடமை அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

போட்டியும், பொறாமையும், பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்குத் துணையாக இருக்கக் கூடியது கல்வி மட்டுமே.

போட்டியும், பொறாமையும்- அறிஞர் அண்ணா

எதிரிகள் தாக்கித்தாக்கி தங்களது வலுவை இழக்கட்டும்...நீங்கள் தாங்கித்தாங்கி வலுவை பெற்றுகொள்ளுங்கள்
எதிரி - அறிஞர் அண்ணா


பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட பிறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை - அறிஞர் அண்ணா


நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்

நடந்தவை - அறிஞர் அண்ணா


கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதாரணமானவைதான். ஆனால் இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.
கட்டுப்பாடும், ஒழுங்கும்- அறிஞர் அண்ணா



வைரம் ஜொலிக்கவேண்டுமானால் சானைப் பிடிக்கத்தான் வேண்டும் 

தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சதான் வேண்டும். 

ஆம் அதேபோல் நல்வாழ்வு பெறவேண்டுமானால் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்... 
பகுத்தறிவு - அறிஞர் அண்ணா



மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் போதாது; தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ளவேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் - அறிஞர் அண்ணா


பதர் நீக்கி நெல் கொள்வதுபோல, பேசப்படுவனவற்றில் பயனற்றதை நீக்கிவிட்டுப் பயனுள்ளதைக் கொள்ள வேண்டும்.
பதர் நீக்கி நெல் அறிஞர் அண்ணா


அறிஞர் அண்ணாவின் புகைப்படங்கள்

4 legends of the tamilnadu

அண்ணா பிறந்தநாள் Sep15

அண்ணாதுரை






Comments