பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.
தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்டார் ஈ.வெ. ராமசாமி.
பிறப்பு: செப்டம்பர் 17, 1879
இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)
இறப்பு: டிசம்பர் 24, 1973
பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.
Periyar For Ever Video
யார் பெரியார் வீடியோ
பெரியார் பொன்மொழிகள்
மதம் மனிதனை மிருகமாக்கும் !
சாதி மனிதனை சாக்கடையாக்கும் !!
கற்பனைகள் எல்லாம் எப்போது கடவுள் ஆனதோ,
அன்றே மனிதன் எல்லாம் முட்டாள் ஆகிவிட்டான்
யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே
உன் சாத்திரத்தை விட
உன் முன்னோரை விட
உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட
உன் அறிவு பெரிது. அதை சிந்தி
-தந்தை பெரியார்.
மனமும் அறிவும் மனிதனுக்கு அழகு !
ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான்;
என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவங்கிய காரியங்களும் செத்துப் போய்விடுவதில்லை
தீண்டாமை ஒழிய வேண்டுமானால்,
சாதி ஒழிய வேண்டும்.
உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள் - தந்தை பெரியார்
நான் சொல்வதை மறுப்பதற்கு உனக்கு உரிமையுண்டு
ஆனால் என்னைப் பேசாதே என்று சொல்லுவதற்கு உரிமையில்லை
பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்
சமுதாயத் துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, பவித்திரம், மடமை முதலியவைகள் பகுத்தறிவு இல்லாததால், அல்லது பகுத்தறிவை செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டதே தவிர, கடவுள் தன்மையால் அல்ல.
என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்
பகுத்தறிவு என்பது ஆதாரத்தை கொண்டு தெளிவடைவது ஆகும்.
கடனோடு காலையில் எழுவதை விட ,
பட்டினியோடு இரவில் படுப்பது மேல்
படிப்பு அதிகமானால் இழிநிலை தானாகவே மாறும்..உயர்வு தாழ்வு தானே அகன்று விடும். அனைவரும் சமம் என்ற வாய்ப்பு தானாகவே ஏற்பட்டு விடும்
சுதந்திர நாடு என்றால் அந்த நாட்டில் வாழும் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும் அல்லவா? சூத்திரனாக இருப்பதுதான் சுதந்திரமா? அதற்கு முடிவு கட்டுவதில் தான் என் வாழ்நாளின் எஞ்சிய பகுதியைக் கழிக்கப் போகிறேன்.
--தந்தைபெரியார்- “விடுதலை” 6-11-1973
“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்”-பாவேந்தர் பாரதிதாசன்
பெரியார் பொன்மொழிகள் pdf
Click here to PDF Download Link: பெரியார் பொன்மொழிகள்
Comments
Post a Comment