அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை என்றால் என்ன ?





இங்கு அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும். அரச மரத்தின் காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்து பதேசித்துள்ளனர். தவிர குழந்தைப் பேறுக்கும் நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு. அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிப்பதற்கு மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம் .இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும் பழமொழியாக சொல்வார்கள்.


Comments